

தத்துவங்கள்
1. இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.
2. தன்னுடைய புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைதான் இந்த உலகம் விரும்புகிறது.
3. மனத்திடம் இல்லாத மனிதனால், வறுமையையும் சரி.. செல்வநிலையையும் சரி.. வெகுநாள் தாங்க முடியாது.
4. இலக்குகளை அடைய முடியாது என்று தெரியும் போது, நமது செயல்பாட்டு முறையினை சரி செய்ய வேண்டுமே தவிர இலக்குகளை சரி செய்யக்கூடாது.
5. வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நல்ல பெயரை எடுக்காமல் இறந்து விடுவமோ என்று அச்சப்படுபவன் மதிக்கப்பட வேண்டிய மனிதன்.

