• Fri. Apr 26th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 16, 2022

சிந்தனைத்துளிகள்

எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும்.
இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும். மிச்சத்தை கழுதை புலிகளுக்கும் விட்டுச் செல்லும். ஆனால் நேரம் சீக்கிரம் கடந்துவிடும்.
வயதான காலத்தில் சிங்கங்களால் வேட்டையாட முடியாது. கொல்ல முடியாது. தன்னைத்தானே காத்துக் கொள்ளக் கூட முடியாது. திரியும். உறுமும். இறுதியில் கழுதைப் புலிகள் ஒன்றுகூடி வயதான சிங்கங்களை அடித்து சாப்பிடும்.
அதுவும் சுலபமான மரணமாக இருக்காது. சிங்கம் உயிரோடு இருக்கும்போதே அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய் கடித்து தின்பன கழுதைப்புலிகள்.
பொதுவாக, ஒன்று இளவயதிலேயே வேட்டையாடும் போது ஏற்பட்ட காயங்களால் சிங்கங்கள் சாகும். இல்லையேல் வயதான காலத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு சாகும்.
இதுதான் உலகம்; இதுதான் வாழ்க்கை.
மிகவும் குறுகிய காலக் கட்டமான, இந்த வாழ்க்கை, மிகவும் தற்காலிகமானது.
இந்த உலகில் நிரந்தரம் என்று ஒன்றுமில்லை. காதல், ஆற்றல், தகுதி, திறமை ஆகிய அனைத்தும் காலத்தால் அழியும். காணாமற் போகும்.
அதனால், பண்பாக நடந்து கொள்ளுங்கள்; அன்போடு இருக்கப் பழகுங்கள். கடந்தகாலம் நன்றாய்க் கழிய எதிர்காலம் செழிப்பாய் அமையும். உங்களின் மீதும் உங்களைப் படைத்த இறைவனின் மீதும் எப்போதும் நம்பிக்கைக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *