தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு,
இல்லையென்றால், இந்த உலகம் உன்னை புதைத்து விடும்…..
தயங்கி நிற்பவர்கள் ஒருபோதும் தங்களுக்கு தகுதியான இடத்திற்கு சென்று சேர்வதே இல்லை…..
உங்கள் தகுதியை உயர்த்தி கொண்டே இருங்கள். உங்களை விட்டு எவர் விலகினாலும் அது அவர்களுக்கே இழப்பாகவும் பலவீனமாகவும் முடிய வேண்டும்……
தோற்றுப் போய்விட்டோமே என உடைந்துப்போய் நிற்பதை விட, தோல்வி தானே என்று உறுதியுடன் திறம்பட தளராத தன்னம்பிக்கையோடு எழுந்து ஓரடி வையுங்கள்…..
அடுத்த அடி தானாக வைத்து வெற்றிப் பயணத்தை தொடங்கியிருக்கும் மனமும் உடலும்……
உங்கள் மனதின் வலிகளுக்கு, காயங்களுக்கு அடுத்தவர் காரணம் என்று நினைப்பதால்தான் காயம் ஆறாமல் இருக்கிறது.
வாழ்நாள் முழுதும் அந்த காயங்களை சுமக்கிறீர்கள்.
உங்கள் தந்தை ஏதாவது சொல்லியிருப்பார், வகுப்பில் ஆசிரியர் மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தியது என கவனியுங்கள். அவர்கள் உங்களை காயப்படுத்துவதற்காக திட்டம் தீட்டவில்லை. எல்லோரும் தத்தமது காயங்களுக்காக நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் காயம் படுகிறீர்கள் எப்படி காயம்பட நீங்கள் தயாராக இருப்பதுதான்.
அங்கு தன்முனைப்பு இருப்பதால்தான்.
எனவே உங்கள் காயத்தை பற்றிய விழிப்புடன் இருங்கள். அந்த காயத்துக்கு உதவி செய்யாதீர்கள். அதை குணமாக விடுங்கள்.அதை சுமப்பதினாலும், மீண்டும் பழிவாங்க நினைப்பதாலும் மட்டும்தான் அந்த காயம் ஆறாமல் ரணமாகவே உள்ளது.
சிறு விஷயங்களுக்காக முழு வாழ்க்கையையும் வீணடிக்கிறீர்கள்.
பழைய காயங்கள் இருந்தால் அது எங்கிருக்கிறது என்று அதன் வேர்களுக்கு செல்லுங்கள்.அதை கவனியுங்கள்.
புதிய காயங்கள் ஏற்படாமல் இருக்க யாராவது உங்களை அவமதித்தால் அமைதியாக வீட்டுக்கு செல்லுங்கள்.
யாராவது உங்களை தாக்கினால், துரோகம் செய்தால் நன்றியோடு வீட்டுக்கு செல்லுங்கள்.
இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரு புதிய சக்தி உங்களுக்குள் பாயும்.
பதிலுக்கு எதுவும் செய்யாமல் இருக்கும்போது நீங்கள் உணர்ந்திராத புதிய சக்தியை, புத்துணர்ச்சியை உங்களுக்குள் எழுவதை நீங்கள் காண்பீர்கள்.
ஒரு புத்தரை நீங்கள் அவமானப்படுத்த முடியாது. செரித்து உள்ளே தள்ளிவிடுவார். அது சக்தியாக மாறிவிடும்.
அதை நீங்கள் தெரிந்துகொண்டுவிட்டால், ஒருமுறை அதை சுவைத்துவிட்டால் உங்கள் வாழ்வு கொண்டாட்டமாகிவிடும்.








