• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 22, 2025

நாம் சேர்ந்து பயணிக்கப்போவது ஒரு குறுகிய காலமே..

இளம் வயது பெண் ஒருவர் ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான இன்னொரு பெண் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார்.
அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக் கொண்டிருந்தன.
அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார்.
உடனே அந்த இளம் பெண்ணிடம், “பேருந்து முழுவதும் நிறைய இடம் காலியாக உள்ளதை கூறுங்கள்” என ஆதங்கப்பட்டார். அந்த பெண் புன்னகைத்தவாறு கூறினார்:
“நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான்.
எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது.
நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்,” என்றார்.
அப்பெண்ணின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை!
“அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது.
நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே” இங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின்,
வாய்ச்சண்டை போடுவது, வீண் வாதத்தில் ஈடுபடுவது, பிறரை மன்னிக்க மறுப்பது, எதிலுமே அதிருப்தியும்
குற்றமும் காணும் போக்கினைக் கொண்டிருப்பது
நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் செயல் என்பது புரிந்திடும்.
ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டாரா? அமைதியாக இருங்கள்,
பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே..
எவரேனும் உங்களுக்குத் துரோகம் புரிந்தாரா, உங்களை ஆக்கிரம வதை செய்தாரா(டிரடடல) ஏமாற்றினாரா,.. மட்டம் தட்டி முந்தப் பார்த்தாரா,
அவமானப்படுத்தினார? அமைதியாக இருங்கள், பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே..
ஒருவர் நமக்கு எப்பேற்பட்ட தொல்லைகளை ஏற்படுத்தினாலும், ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள், பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே.. இப்பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே..
உறவையும் நட்பையும் போற்றுவோம். ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம்,
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம், மன்னிப்போம் மறப்போம்.
நன்றி பாராட்டி மகிழ்ச்சியாக வாழும் வழியைப் பார்ப்போம்.
ஏனெனில், “நாம் சேர்ந்து பயணிக்கப்போவது ஒரு குறுகிய காலமே”