• Mon. Jun 24th, 2024

படித்ததில் பிடித்தது 

Byவிஷா

Jun 16, 2024

* கடல் பெரியது தான் ஆனால் சந்தோசங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான் ஆகையால் காணுவதை காட்டிலும் கிடப்பதை கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம்..!

*வாழ்க்கையின் சந்தோசத்தை பிற நபரிடம் தேடாதே.. உன் சந்தோசத்தை உனக்குள் தேடு.!

*விதை போராடுவதால் மட்டும் தான் மண்ணிலிருந்து வெளிவந்து ஒரு மரமாக கம்பிரமாக நிற்கிறது.. நாம் போராடினால் மட்டும் தான் துன்பங்களை கடந்து தடைகளை உடைத்து கம்பிரமான மனிதராக மிளிர முடியும்.

*வாழ்வின் விடை மரணம் எவராலும் மறுக்க முடியாது.. இடையில் வாழும் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள்.!

*துன்பமான சூழ்நிலையில் சிறிது புன்னகை செய்ய கற்றுக்கொண்டால்.. துன்பத்திலிருந்து வெளிவருவதற்கான மனவலிமை கிடைக்கும்.!

*வாழ்க்கை முழுவதும் கவலைகளை சேமித்து வைத்து.. அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.!

*நம்மிடமிருந்து உதிக்கும் வார்த்தைகளும் எண்ணங்களும் அடுத்தவர்களின் வாழ்க்கைக்கு உரமாக இருக்க வேண்டும்.!

*விழுவதும் எழுவதும் எனக்கு புதிதல்ல.. உதிக்கும் சூரியனை போல விழுந்தாலும் மீண்டும் எழுவேன்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *