
சிந்தனை துளிகள்
சில கவலைகளை தூர வைத்து பார்க்க பழகிக் கொண்டால் போதும்.. வாழ்க்கை அழகாக நடை போடும்.
நினைவுகளை சேகரியுங்கள் பிரச்சனைகளையும் மனக்கவலைகளையும் சேர்க்காதீர்கள்.. அன்பை சேகரியுங்கள் ஆணவத்தை சேர்க்காதீர்கள்.. இயல்வதை சேகரியுங்கள் இயலாமையை சேர்க்காதீர்கள்.. முயல்வதை சேகரியுங்கள் முயலாமையை சேர்க்காதீர்கள்.. பாசத்தை சேகரியுங்கள் பகைமையை சேர்க்காதீர்கள்.!
எல்லாம் என்னுடையது என்ற வாழ்க்கை பயணத்தில் இறுதியில் எதுவும் நம்முடையது இல்லை என்பதே நிதர்சனம்.
நீ அடைந்த உயரத்தை பொறுத்துத்தான் உன் வணக்கத்துக்கு கூட மறு வணக்கம் கிடைக்கும்.
இன்னாரைபோல வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட நம்மை போல வாழ வேண்டும் என்று பிறர் எண்ணும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.!
