கோவில்பட்டியில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் பி.கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.
விழாவில் அவர் தெரிவித்ததாவது : முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் வெற்றி பெற்று தேர்ந்தேடுக்கப்பட்ட வீர்ர்கள் தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுகின்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ளனர். அதுபோல நமது மாவட்டத்திற்கு 38 மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் வருகை.தந்துள்ளனர்.

கோவில்பட்டி ஹாக்கி விளையாட்டில் சிறந்து விளங்குகின்ற பகுதியாகும். கோவில்பட்டியை ஹாக்கிபட்டி என்றும் அழைக்கப்படும் நகரமாகும். நமது பகுதியைச் சார்ந்த மாரீஸ்வரன் இந்திய அளவிலான குழுவில் இந்தியாவிற்காக விளையாடிக் கொண்டிருக்கின்றார். மேலும், இந்த மைதானமும் விளையாட்டு வீரர்களின் வசதிக்கேற்ப நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவிலான ஹாக்கி ஜீனியர் போட்டி இங்கு நடைபெற்றது.
அதற்கேற்ற வகையிலான மைதானம் இங்கு அமையப் பெற்றுள்ளது. எனவே, இங்கு வருகை தந்துள்ள அனைத்து வீரர்களையும் வருக என வரவேற்கிறோம். நல்ல முறையில் நீங்கள் பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும். வெற்றி வாய்ப்பு என்பது ஏதாவது ஒரு குழுவிற்கு தான் வரும். இருந்தாலும், இங்கு வருகைதந்துள்ள அனைத்து வீரர்களும் உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
பிற வீரர்களுடன் ஒப்புமைபடுத்தி வருகின்ற காலங்களிலும் நன்றாக பயிற்சி எடுத்து, இன்னும் அதிகமாக திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். உங்களை நீங்களே முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமை வகித்தார். கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், கோவில்பட்டி நகரமன்ற தலைவர் கருணாநிதி, மண்டல முதுநிலை மேலாளர் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை) எம்.ராஜா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோனி அதிஷ்டராஜ், விளையாட்டு அலுவலர் (கோவில்பட்டி) ரத்தினராஜ், கோவில்பட்டி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகைதந்துள்ள விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.”