• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வெளிநாட்டு நாய் வந்ததால் நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது..,

BySeenu

Sep 3, 2025

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,

TET பரீட்சை குறித்த கேள்விக்கு,

இந்த நாட்டின் நிர்வாகத்தை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும், நீண்ட காலமாக எது ஒன்றுமே நீதிமன்றத்தின் மூலமாக செயல்படுத்துவது என்பதை அதிகாரம் முடிவு செய்து கருக்கிறது. அப்படி என்றால் சட்டமன்றம் நாடாளுமன்றம் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. நீட் தேர்வு எழுத வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை நீதிமன்றம் முடிவெடுக்கிறது,

கச்சத்தீவை மீட்க வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை நீதிமன்றம் முடிவெடுக்கிறது, காவிரியில் நீர் கொடுக்க வேண்டுமா ? கொடுக்க வேண்டாமா ? என்பதை நீதிமன்ற முடிவு செய்ய வேண்டும், முல்லைப் பெரியாறு அணையை கட்ட வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும், எதை ஒன்றையுமே நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்றால், சட்டமன்றம், பாராளுமன்றம் எதற்காக உள்ளது ??..

அப்படியானால் மக்களாட்சி என்பது இங்கு சொல்லாட்சியாக மட்டும் தான் உள்ளது.

இங்கு ஜனநாயகம் எங்கு இருக்கிறது.??. இந்த நாட்டின் அதிகாரம் யாரிடம் இருக்கிறது?..

எல்லாத்துக்கும் தேர்வு எழுத வேண்டும் என சொல்பவர்கள், அமைச்சர், பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் என ஏன் எந்த தேர்வும் எழுதுவது இல்லை..

மருத்துவம், ஆசிரியர் உட்பட அனைத்திற்கும் தகுதியானவர்கள் வர வேண்டும் என நினைக்கிறார்கள், ஆனால் நாட்டை ஆளும் தலைவர்களுக்கு எந்த தேர்வும் இருப்பது இல்லையே ஏன் ??..

இந்த தேர்வுகளால் தகுதி கூடி விடும் என எப்படி நினைக்கிறீர்கள்??.. மீட்பை கொண்டு வந்தால் கல்விக் கொள்ளை குறைந்து விடும் எனக் கூறினீர்கள்??.

ஆனால் நீட் பயிற்சி என செல்லும் பொழுது 5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. ஆனால் அதிலும் தேர்ச்சி பெற்று வந்தால் 35 லட்சம் வரை கட்டி படிக்க வேண்டி உள்ளது..

அப்படியே படித்தாலும் வெறும் எம்.பி.பி.எஸ்-க்கு எந்த மதிப்பும் இல்லை. மேற்கொண்டு படிக்க வேண்டிய நிலைமை உள்ளது.

அப்படியானால், கோடிகளில் செலவு செய்து டாக்டருக்கு படித்து விட்டு வெளியே வர வேண்டிய நிலைமை இங்கு மாணவர்களுக்கு உள்ளது.

கொள்ளை குறையும் எனக் கூறினீர்களே இங்கு எந்த கொள்ளை குறைந்தது??..

தகுதியான மருத்துவரை உருவாக்குவதற்கு பதிலாக இது போலி மருத்துவரை உருவாக்கி இருக்கிறது… என்று கூறினார்.

பீகாரில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக கூறுவது பற்றிய கேள்விக்கு,

காங்கிரஸ் இருக்கும் போது செய்ததைத் தான் பி.ஜே.பி தற்போது ஆட்சியில் இருக்கும் பொழுது செய்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நேர்மையாக தான் வாக்குப் பதிவு நடந்தது என்பதை எங்கு வந்து சத்தியம் செய்வீர்கள்.

EVM எந்திரத்தில் இது போன்ற பிரச்சனைகள் நடக்கும் என்பது மூளை இருக்கும் அனைவருக்கும் தெரியும்.

EVM எந்திரத்தை எத்தனை நாடுகள் பயன்படுத்துகிறது என ராகுல் காந்தியை வந்து சொல்லச் சொல்லுங்கள்.

இந்த எந்திரத்தை தயாரித்துக் கொடுக்கும் ஜப்பான் இதை பயன்படுத்துகிறதா??. மூன்றே நாடுகள் தான் இதை வைத்து இருக்கிறது.

பங்களாதேஷ், நைஜீரியா, மற்றும் இந்தியா.. இவை மூன்றுமே ஊழலில் பெருத்த நாடுகள்.

பங்களாதேஷ் இதை தூக்கி எறிந்து விட்டது, தற்போது பங்களாதேஷும் இந்தியாவும் தான் இதை வைத்து இருக்கிறது.. அதில் முறைகேடு நடக்கிறது என்றால் அந்த முறையையே தூக்கி போட வேண்டியது தானே??..

உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கள், ஈரோடு கிழக்கு தேர்தலில், 25500 போடு நிறுத்தச் சொன்ன அந்த மகான் யாரு ? இன்னும் ஒரு 500 ஓட்டு வாங்கி இருந்தால் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறிவிடுவோம்.. நான் டிபாசிட்டை இழக்க வேண்டும் என நீங்கள் முடிவு செய்து இருக்கிறீர்கள்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அதை நிறுத்தி வைத்து விடுகிறார். கள்ள ஓட்டு போடும் போது தடுக்காத தேர்தல் ஆணையம் வாக்குக்கு காசு கொடுக்கும் போது தடுக்காத தேர்தல் ஆணையம், என்னுடைய வாக்கை நேர்மையாக எண்ணுவார்கள் என்பதை நான் நம்ப வேண்டுமா ??.. அந்த எந்திரத்தில் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.

ராகுல் காந்தி எந்திரத்தை தூக்கிப் போட்டு விட்டு பழையபடி வாக்குச் சீட்டுக்கு வாருங்கள் எனக் கூற வேண்டியது தானே??. என்று கூறினார்.

பாட்டிகள் என அரசு அதிகாரி காலில் விழுந்தது குறித்த கேள்விக்கு,

நாட்டின் முதல் குடிமகனாக வந்த பின்பும் கூட என் மீது சுமத்தப்பட்ட சாதி இது செல்ல மாட்டேன் என்கிறது. நாட்டின் முதல் குடிமகள் திரௌபதி முர்மு, அத்வானி, பிரதமர் மோடி ஆகியோர் நாற்காலியில் அமர்ந்து இருக்கும் போது, ஆனால் திரௌபதி அவர்களால் அங்கு அமர முடியவில்லை அவர் நின்று கொண்டு தான் இருந்தார். அவர்கள் கோவிலுக்குள் சென்று வணங்குகிறார்கள். அம்மா வெளியே நின்று கொண்டு இருக்கிறார்.. எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் , சாதி இழிவு அப்படியே இருக்கிறது. இதில் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் கூட கொடியேற்ற முடியாது. நாற்காலியில் அமர முடியாத நிலைமை தான் இன்றும் இருக்கிறது.

சாதிக பாகுபாடு எப்பொழுது தான் செல்லும் என்ற கேள்விக்கு,

கண்களுக்கு தெரியாத நோய் எதுவும் இல்லை, இது ஒரு மன நோய் மட்டுமே.. சக மனிதனை தாழ்த்தி வீழ்த்தி சுகம் காண்பது நாம் உருவாக்கிக் கொண்டது தானே. நாங்கள் வருவோம் சிறிது நாட்களில் அதை சரி செய்வோம் என்று கூறினார்.

தெரு நாய்கள் குறித்து கமலஹாசன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு,

இதில் கமலஹாசன் அவர்கள் கூறியது போல, கழுதை, சிட்டுக் குருவி, வண்ணத்துப் பூச்சிகள் போன்றவை அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது. நான் எந்த அழிவிற்கும் கவலைப்படவில்லை. நாம் சக மனிதன் சாவையே சகித்துக் கொண்டு தான் செல்கிறோம்.

நாயை முற்றிலுமாக ஒழிப்பதால், எலிகள் பெருகும், பிளேக் நோய்கள் பெருகக் கூடிய ஆபத்து இருக்கிறது. எதையும் ஒரு சம நிலையில் வைக்க வேண்டும்.

இதற்காக மாநகராட்சி முறையாக நாய்களை பராமரித்து தடுப்பூசி செலுத்த வேண்டும்.

நீங்கள் அதைத் தெரு நாய் எனக் கூறுகிறீர்கள், ஆனால் அது தான் நம்முடைய வீட்டு நாய்..

நாம் வெளிநாடுகளில் இருக்கக் கூடிய உயர் தர நாய்களை வீட்டிற்குள் கொண்டு வந்ததால் இவைகள் தெரு நாய்கள் ஆகிவிட்டது.

நம் நாட்டு நாய்களின் பராமரிப்பு செலவு மிகவும் கம்மி, நாம் உண்டது போக மிச்ச மீதிகளை தான் அதற்கு கொடுப்போம், வீட்டு வாசலில் கிடப்பான் பாதுகாப்பாகவும் இருப்பான். நம்மோடு ஆடு, மாடு மேய்க்க வருவான் வேட்டைக்கும் செல்வான். ஆனால் இவர்கள் வளர்த்தும் நாய்க்கு உண்ணும் பிஸ்கட்டும் தனி மருத்துவமும் தனி, அவர் குளிரூட்டப்பட்ட அறையில் தான் இருப்பார். ஆனால் அவர்கள் வாங்கும் அந்த நாய் குட்டிகள் 25 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. இது ஒரு பெரிய சந்தை, என் நாயை தெருவில் போட்டு விட்டு அவனின் நாயை வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டான்.

அதனால் என் தெரு நாய் ஆகி விட்டது..

அது உரிய பராமரிப்பு இல்லாததாலேயே இவ்வளவு பெருகி விட்டது. வருவோர் போவோரெல்லாம் பச்சைக் கறி துண்டுகளை வாங்கி போட்டு, அதுபோன்று பழகி விட்டதால் திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஆடு, மாடுகளை அது கடித்து விட்டது, பெரம்பலூரில் அதே போன்று நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டன.

ஆனால் நாங்கள் அதற்காக அறிக்கையும் கூட கொடுத்தோம் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. அரசாங்கம் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும், ஆனால் அதற்காக தெரு நாய்களை முற்றிலுமாக ஒழித்து விடுவோம் என கூறுவது கேட்டுக் கொள்ள முடியாதது.

ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஏழைகளை கொன்று விட முடியுமா ??..

குடிசை இல்லா வீடுகள் வேண்டும் என்பதற்காக குடிசைகளை தீ வைத்து கொளுத்தி விட முடியுமா?..

அரசாங்கம் தான் இதை சரி செய்ய வேண்டும்..

50 சதவீதம் வருகை முதலிலேயே போட்டு இருக்க வேண்டும் என டிரம்ப் கூறுவது பற்றிய கேள்விக்கு,

அவர் பேசுவதில் எனக்கு எந்த வியப்பும் இல்லை, அவர் புவி வெப்பமயமாவது கூட பைத்தியக்காரத்தனம் என கூறுகிறார்.. அவர் ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்..

நாம் பிற நாடுகளை சார்ந்து இருப்பதாலேயே இவ்வளவு சரிவுகளை சந்திக்கிறோம். மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நிச்சயம் நாம் சந்திக்க வேண்டிய நிலைமை இருக்கும். பங்களாதேசுக்கும் இலங்கைக்கும் வந்த பொருளாதார வீழ்ச்சி நம் நாட்டிற்கு வந்தால் நம்மால் தாங்க முடியாது.

ஆனால் இந்தியா ஒரு துணை கண்டம், அவ்வளவு பெரிய பொருளாதாரம் பயிற்சி வந்தால் நம்மால் தாங்க முடியாது. இவர்கள் தானே கொஞ்சி குலாவிக் கொண்டு இருந்தார்கள், இதே ட்ரம்பை கூட்டிக் கொண்டு வந்து ஏழு வகையாக மாட்டுக் கரியை வறுத்து பொறித்து வைத்த மகான்கள் இங்கு இருக்கிறார்களே..

அவர்கள் தானே சென்று பேச வேண்டும். எனை அந்த நாட்டிற்குள் நுழையவே விடமாட்டார்கள் எனை தடை செய்து வைத்து இருக்கிறார்கள்.

செங்கோட்டையன் நாளை மனம் திறந்து பேசப்போவதாக கூறியிருப்பது குறித்த கேள்விக்கு,

இது மற்ற கட்சியின் பிரச்சனைகள் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை அவர்கள் தான் சரி செய்து கொள்ள வேண்டும்.. அதை நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை.

நாம் தமிழர் கட்சி போராட்டத்திற்கு காவல் துறையின் அனுமதி மறுப்பு குறித்த கேள்விக்கு,

எங்களைப் பொறுத்த வரை பிரச்சனையை தீர்க்கவில்லை என்றால், நாமே பிரச்சனையாக மாறி விட வேண்டும் என எங்களுக்கு கற்றுக் கொடுத்த தலைவன் கூறி இருக்கிறார்.

நாங்கள் பிரச்சனையை சொல்லிக் கொண்டே இருக்கிறோம் ஆனால் நீங்கள் கவனிப்பதே கிடையாது, அதனால் நாங்களே பிரச்சனையாக மாறி விடுகிறோம். நாங்கள் அந்த பிரச்சனைக்காக களத்திற்கு சென்று அது முடியும் வரை போராடுகிறோம். இதே முதல்வர் சட்டசபையில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறோம் இந்த மூன்று ஆண்டுகளில் எனக் கூறுகிறார். இதில் அவருக்குப் பெருமை இல்லை, ஒரு லட்சம் பிரச்சனைகளை கையில் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்..

மக்களே எங்களை இங்கு பிரச்சனை நடக்கிறது வாருங்கள் என அழைக்கிறார்கள். மக்கள் போராட்டம் நடக்கும் போது காவல் துறையே தலையிட்டு அதை தீர்த்து வைக்க வேண்டும். ஆனால் அரசு அதைக் காலம் கடத்தி விடுகிறது. அதனால் நாம் தமிழர் கட்சி களத்தில் நிற்கிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், எனக்கு சரி என்று எது மனதிற்குப்படுகிறதோ அதைத்தான் செய்வேன். மற்றவர்களின் சொல்லிற்காக எதையும் செய்ய மாட்டேன். என் மனசாட்சிப்படி தான் நான் எப்பொழுதும் நடப்பேன்.

தமிழக வெற்றி கழகத்தை பொறுத்த வரை, பாரதிய ஜனதா அவர்களுக்கு கொள்கை எதிரி ?, தி.மு.க அரசியல் எதிரி ?. அப்படியானால் கொள்கைக்கும், அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?..

அப்படியானால் தி.மு.க வும்., பா.ஜ.க வும் உங்களுக்கு எதிரி என்றால், தமிழக வெற்றி கழகம் காங்கிரசையும், அ.தி.மு.க வையும் புனித படுத்துகிறதா ?? கச்சத் தீவை திருப்பி எடுத்து விடுங்கள் என மோடியிடம் பேசுகிறீர்கள்..

கச்சத்தீவை முதலில் தாரை வார்த்தவர்கள் யார் ??.. மோடியிடம் ஒரு கிளாஸ் மெட் கிட்ட பேசுவது போல் நீட்டை எடுத்து விடுங்கள் என கூறுகிறீர்கள்..

ஆனால் அந்த நீட்டை கொண்டு வந்தது யார் ? இவைகளை எல்லாம் கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சி தான்…

இங்கு இந்திய திணித்தது, காவிரி நதி நீரை பறித்தது, கச்சத்தீவை கொடுத்தது, அணு உலை திணித்தது, ஸ்டெர்லைட்டை நட்டது, மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது, கல்வியை பொதுப்பட்டிகளுக்கு கொண்டு சென்றது, மருத்துவ உரிமைகள் பறித்தது என அனைத்தும் செய்தது காங்கிரஸ் தான்..

இங்கு நீங்கள் அதை புனிதப்படுத்தும் வேலையை செய்து கொண்டு இருக்கிறீர்கள்..

கண்ணு முன்னாடியே என் தினத்தை, தேசிய இனத்தின் விடுதலையை அழித்தது காங்கிரஸ் கட்சி தான்.

லட்சக் கணக்கான என் இன மக்களை கொன்று குவித்தவர்கள் இந்த காங்கிரசார்.

எங்கள் காங்கிரசை எதுவுமே சொல்லவில்லை என்றால் அது குற்றமற்ற கட்சியா ?? மன்னர் ஆட்சியின் தொடக்கமே காங்கிரஸ் தான்..

ஊழல் என்றால் ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறைக்கு சென்றது அ.தி.மு.க.. அதை ஏன் பேசுவதில்லை ??..

திண்டிவனத்தில் கவுன்சிலர் தாழ்ந்த மக்களை தரக்குறைவாக பேசியதான கேள்விக்கு,

இதை இந்த நாட்டின் மிகப்பெரிய அவமானமாக நினைக்கிறேன், இந்த நூற்றாண்டில் இவ்வளவு பெரிய கல்வி அறிவு பெற்று சமூகம் முன்னேறிச் செல்லும் பொழுது, இன்னும் இந்த இழிவு நிலையில் நாம் இருப்பதை எண்ணி ஒவ்வொரு நாட்டின் மகனும் தலை குனிய வேண்டும். இறைவரும் செய்தியாக பேத்து விட்டு கடந்து செல்ல முடியாது. அடுத்த தலைமுறைக்கு இதை கடத்த விடாமல் தடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இதற்கெல்லாம் பதவியை பறித்து வெளியே போடா என சொல்ல வேண்டும்.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதுபோன்று செய்பவர்களை, உன்னுடைய கல்வி சான்றிதழ் செல்லாது, கடவு சீட்டு இல்லை, குடும்ப அட்டை இல்லை, வாக்குரிமை இல்லை, என அனைத்தையும் நீக்கி விட்டு சாதியை கட்டிப்பிடித்து பெருமையாக வாழ்ந்து கொள் என சொல்லி விடுவோம் என கூறினார்.