• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கோலிவுட்டை கலக்கிய பிற மாநில நாயகர்கள்!

சினிமா தோன்றிய காலம் முதல், திரையுலகில் நாயகிகளை விட அதிகம் கோலோச்சிருப்பிவர்கள் நாயகர்களே! அன்று முதல் இன்று வரை நடிகர்களை முன்னிலைபடுத்தும் படங்களே அதிகம் வெளிவந்துள்ளன! அன்றில் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரை சிலர், வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது! .

எம்ஜிஆர் : இந்தியாவில் தலைசிறந்த நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத் தன்மையுடன் திகழ்ந்தவர் எம் ஜி ராமச்சந்திரன். இவர் ஸ்ரீலங்காவில் வாழ்ந்த மலையாளி குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் தமிழர் இல்லை என்றாலும் தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது!

ரஜினிகாந்த் : தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் ராமோசி ராவ், ரமா பாயிக்கும் நான்காவது மகனாக 1949 இல் பிறந்தார். இவர் ஒரு மராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

விஜயகாந்த் : கேப்டன் விஜயகாந்த் பிறந்து வளர்ந்தது மதுரையில் தான். ஆனால் அவருடைய அப்பா அழகர்சாமி நாயுடு மற்றும் அம்மா ஆண்டாள் இருவரும் தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் விஜயகாந்த் தமிழ் மொழிகளைத் தவிர மற்ற மொழி படங்களில் இதுவரை நடித்தது இல்லை, என்பது குறிப்பிடத்தக்கது!

மோகன் : மைக் மோகன் கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மோகன் ஆரம்பத்தில் கன்னட திரையுலகில் பாலுமகேந்திராவின் கோகிலா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் மூடுபனி படத்தின் மூலம் அறிமுகமானார்! அதன்பின், அவர் நடித்த பல படங்கள் வெள்ளிவிழா கண்டதால் வெள்ளி விழா நாயகன் என அழைக்கப்பட்டார்.

பிரகாஷ்ராஜ் : தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரகாஷ்ராஜ். இவர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் பிறந்தவர். கர்நாடகாவில் இவரை பிரகாஷ்ராய் என்று அழைப்பார்கள். அதன்பின்பு இயக்குனர் கே.பாலச்சந்தரின் ஆலோசனையால் பிரகாஷ்ராஜ் எனப் பெயரை மாற்றிக்கொண்டார்.

அர்ஜுன் சர்ஜா : ஆக்சன் கிங் அர்ஜுன் கர்நாடகாவைச் சேர்ந்த மதுகிரி என்ற இடத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை ஜே. சி. ராமசாமி சக்தி பிரசாத் ஒரு புகழ்பெற்ற கன்னட நடிகர் ஆவார். ஆரம்பத்தில் அர்ஜுன் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்தார். அதன்பிறகு அர்ஜுன் நடித்த தமிழ் படங்கள் இவரை மிகப் பிரபலமாக்கியது.

ரகுவரன் : தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பியவர் நடிகர் ரகுவரன். பாட்ஷா படத்தில் இவர் நடித்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் இவரை மிகவும் பிரபலமாக்கியது. ரகுவரன் கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்தவர். அதன்பிறகு தந்தையின் தொழில் காரணமாக குடும்பத்துடன் தமிழகத்துக்கு வந்தனர். ரகுவரன் கோவையில்தான் தன் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

விஷால் : தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளவர் விஷால். செல்லமே, சண்டக்கோழி, திமிரு போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவர் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தாலும் இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கிய ஜி கே ரெட்டி விஷாலின் தந்தையாவார்.