குமரி சுற்றுலா தலத்தில் “உணவாய் உறவாய்” என்ற நண்பர்கள் அமைப்பு மூலமாக
உணவு, உடைகள் தேவைக்கு அதிகமாக வைத்து இருப்பவர்கள் அதனை கொண்டு வந்து வைப்பதற்கு என குளிர்சாதன பெட்டி மற்றும் ஆடைகள் வைக்கும் அலமாரி குமரி சுற்றுலா தலத்தில் மலையாள பள்ளி அருகில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக உணவின்றி, ஆடைகளின்றி உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் தொடக்க இன்று நடந்தது. நிகழ்வை கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் துவக்கி வைத்தார்.







