• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பாஜக, இபிஎஸ் அணிக்கு எதிராக ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு!

ByA.Tamilselvan

Apr 20, 2023

கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளராக எம்.நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது.
புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசனை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். புலிகேசி நகர் தொகுதியில் ஏற்கனவே பாஜக வேட்பாளர் முரளி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதிமுக ஓபிஎஸ் அணியும் வேட்பாளராக நெடுஞ்செழியனை அறிவித்திருக்கிறது.