• Fri. May 3rd, 2024

கூட்டுறவு தணிக்கை துறையினர் ஆர்ப்பாட்டம்

ByKalamegam Viswanathan

Jul 14, 2023

மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டல அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை கூட்டுறவு தணிக்கை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டல அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை கூட்டுறவு தணிக்கை இணை இயக்குநர் அலுவலகத்தில், கூட்டுறவு தணிக்கைக்கு சற்றும் பொருந்தாத குழு தணிக்கை முறையை ரத்து செய்து, கூட்டுறவு சட்டம் மற்றும் விதிகளின்படி பழைய தணிக்கை நடைமுறையை அமுல்படுத்த வேண்டும். தணிக்கைக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். தணிக்கைப் பணியில், குறியீடு நிர்ணயம் செய்யக்கூடாது. அதிகாரிகளின் நிர்ப்பந்தம் இன்றி தணிக்கை சுதந்திரமாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசு உத்தரவுப்படி, விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட சனிக்கிழமைகளில் அரசு உத்தரவுக்கு முரணாக கட்டாயமாக பணியாற்ற வற்புறுத்துவதை நிறுத்த வேண்டும். அனைத்து நிலைகளிலும் உள்ள பணியாளர்களுக்கு விரைந்து பதவி உயர்வு வழங்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் அவர்களுக்கு பதவி உயர்வு பணியிடம் வழங்க வேண்டும். சிறப்பு பணி அந்தந்த மண்டலங்களில் அருகாமை மாவட்டங்களில் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரை திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை துறையை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *