முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னைக்கு செல்வதற்காக தேனியில் இருந்து திண்டுக்கல் ரயில் சந்திப்பிற்கு காரில் வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு முடிவடைந்த நிலையில் என்ற கேள்விக்கு
அண்ணன் செங்கோட்டையன் நல்ல பதில் சொல்வார் என பதிலளித்தார்.

சசிகலாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, சந்திப்பேன் உரிய நேரத்தில் என்ன பதில் அளித்தார். டிடிவி சந்திப்பீர்களா அந்த கேள்விக்கு, விரைவில் உங்களுடன் சொல்லிவிட்டு தான் சந்திப்பேன் என பதிலளித்தார்.
விஜய் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, முன்னரே சொல்லிவிட்டேன் எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.
எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமிர்தாவை சந்திக்க உள்ளார் தாங்கள் டெல்லி செல்ல உத்தேசம் உள்ளதா என்ற கேள்விக்கு தற்பொழுது தற்போது இல்லை என பதில் அளித்துள்ளார். நயினார் நாகேந்திரன் தொலைபேசியில் தொடர்பில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு இரு தினங்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசினார். சந்திக்க வேண்டும் என்று சொன்னார் உறுதியாக நாம் சந்திப்போம் என்று சொல்லி இருக்கிறேன் என்றார்.
சிஎம் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை மாற்றினால் டிடிவி, என் டி ஏ கூட்டணிக்கு வருவதாக கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று பதில் அளித்தார்.