• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுகவிலிருந்து இபிஎஸை நீக்கிய ஓபிஎஸ்

ByA.Tamilselvan

Jul 15, 2022

எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேர்ஆதிமுகவிலிருந்து நீக்கியுள்ளார் ஓபிஎஸ் .
ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்களான ரவீந்திரநாத் எம்பி, ஜெயபிரதீப் உட்பட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதற்கு பதிலடியாக, எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேரை நீக்கி ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
அதன்படி, எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜு, ஆதிராஜாராம், ஜக்கையன், ராஜன் செல்லப்பா, தி.நகர் சந்தியா, விருகம்பாக்கம் ரவி, அசோக், கந்தன், இளங்கோவன் ஆகியோர் நீக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.