• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மருத்துவகல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து-தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்

ByA.Tamilselvan

May 28, 2023

மருத்துவக்கல்லூரிக்கான அங்கீராரம் ரத்து செய்யப்பட தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கே காரணம் என ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் …சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிற்கான அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் உள்ளதாகவும், இதன் காரணமாக வரும் கல்வியாண்டில் இந்த கல்லூரிகளில் மருத்துவ இருக்கைகளை நிரப்ப முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதன் காரணமாக கிட்டத்தட்ட 500 மருத்துவ இருக்கைகளை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தி.மு.க. அரசின் திறமையின்மையே இது போன்ற நிலைக்கு காரணம். தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கிற்கு, கவனக் குறைவிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களின் நலனையும், மருத்துவர்களின் நலனையும், மருத்துவம் பயிலவிருக்கும் மாணவ, மாணவியரின் நலனையும் கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் நடவடிக்கை எடுத்து, மருத்துவக் கல்லூரி களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.