வி.கே.சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்தார். முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் வி.கே.சசிகலா இரண்டு நாட்கள் ஆன்மிக பயணமாக தென்மாவட்டங்களுக்கு செல்வதாக அறிவித்திருந்தார்.
இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்ட அவர் ஆன்மிக பயணம் செல்வதாகவும், தொண்டர்களை மட்டுமே சந்திக்கவிருப்பதாகவும், எந்தவொரு ஆலோசனைக் கூட்டமோ, கட்சி சார்ந்த அலுவல் கூட்டமோ இல்லை என அறிவித்திருந்தார். ஆனால், இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்றிருந்த சசிகலாவை திருச்செந்தூரில் ஓபிஎஸ்-இன் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசிவருகிறார். இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
அதேசமயம், தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.