• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒற்றை வரியில் பதில் அளித்த ஓபிஎஸ்

ByA.Tamilselvan

Feb 3, 2023

அண்ணா நினைவிடித்திற்கு சென்ற ஓபிஎஸிடம் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஓரே வரி பதில் அளித்தவிட்டு சென்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையுடனான சந்திப்புக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்து வெளியில் வந்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை எதற்காக உங்களை சந்தித்தார்? அ.தி.மு.க.வில் நடப்பது என்ன? இரு அணிகளும் ஒன்று சேர்வதற்கு சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? என்பது போன்ற கேள்விகளை பத்திரிகையாளர்கள் எழுப்பினர். இதற்கெல்லாம் பதில் அளிக்காத ஓ.பன்னீர்செல்வம், ‘தர்மம் வெல்லும்’ என்று ஒற்றை வரியில் பதில் அளித்துவிட்டு அண்ணா நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த புறப்பட்டு சென்றார்.