ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போலந்து 28 போர் விமானங்களும், பல்கேரியா 30 போர் விமானங்களும், ஸ்லோவேக்கியா 12 போர் விமானங்களும் வழங்க முன்வந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் அனுப்பப்படும் என அறிவித்துள்ளது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் இன்று 6-வது நாளாக ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.