கன்னியாகுமரி ஆழ்கடல் பரப்பில் ஒன்றிய அரசின் எரிவாயு, எண்ணெய் எடுக்க அனுமதி. குமரியில் மீண்டும் பாஜக அரசுக்கு எதிரான”கால” நிலை மாற்றத்தில், குமரி மாவட்டத்தில் மீனவ மக்களின் மக்கள் தொகை மிக நெருக்கமாக இருக்கும் கடற்கரை பகுதியில் பன்னாட்டு வர்த்தக துறைமுகம் திட்டத்திற்கு, மீனவ மக்களின் எதிர்ப்பு பேரலையை கண்டு, ஒன்றிய அரசு அந்த திட்டத்தையே விட்டு, விட்டு பின் வாங்கியதும், பொன்.ராதாகிருஷ்ணனின் தொடர் தோல்விக்கும் மீனவர்கள் போராட்டம் ஒரு காரணம்.
அண்மையில் மணவாளகுறிச்சி பகுதியில் மண் எடுக்க நிலங்கள் ஒப்பந்தம் என்ற ஒன்றிய அரசின் திட்டத்திற்கும் கடினமான எதிர்ப்பு காரணமாக திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலையில், குமரி மீனவர்களின் வாழ்வியல் ஆதாரமான
கன்னியாகுமரி ஆழ் கடல் பகுதியிலும் (தமிழகத்தில் 4 வட்டாரங்களில்) அரசு
அரசு அனுமதி நல்கி உள்ளது.

ஒன்றிய பாஜக அரசின் ஆணைக்கு எதிராக எதிர்ப்பு நிலையான நிலைப்பாட்டை
நோக்கிய கால நிலைக்கு, பாஜக அரசே விதை தூவும் அவலம்.!?
தமிழக ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி. மத்திய எரிசக்தி இயக்குனரகம் சார்பாக எண்ணெய், எரிவாயு எடுக்க, கடந்த ஜனவரி 2024ல் 9வது சுற்று ஏலம் விடப்பட்டது. தமிழக ஆழ்கடல் பகுதியில் 4 வட்டாரங்கள் உள்பட நாடு முழுவதும் 28 வட்டாரங்களில் 1,36,596 சதுர கி.மீ. ஏலம் விடப்பட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரி அருகே 3, சென்னை அருகே 1 என மொத்தம் 4 ஆழ்கடல் பகுதிகள் இதில் அடக்கம்.

டெல்லியில் கடந்த வாரம் ஏலம் இறுதி செய்யப்பட்டு, தமிழக ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி. எண்ணெய், எரிவாயு எடுப்பதால் ஆழ்கடலில் கடல் வளம் பாதிக்கும் என மீனவ, சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் எதிர்ப்பு.




