சோழவந்தான் அருகே நகரி கிராமத்தில் நடைபெற்ற முனைவர் இல்ல விழாவில் பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரி கிராமத்தில் நடைபெற்ற பழனிக்குமார் முனைவர் ராமலட்சுமி இல்ல விழாவிற்கு வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நிவாஸ் டிராவல்ஸ் நிரஞ்சன் பிராய்லர் நிறுவனத்தினர் சார்பாக, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மா, பலா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட மரக்கன்றுகளை நிறுவனத்தின் சார்பில் அனைவருக்கும் வழங்கினர். பொது நிகழ்ச்சிகளில் அன்பளிப்புகள் வழங்கப்படுவதை தவிர்த்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கியது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பாராட்டை பெற்றது.