• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

முன் விரோதம் காரணமாக ஒருவர் கொலை.! மற்றொருவர் படுகாயம்..,

ByKalamegam Viswanathan

Jun 19, 2026

மதுரை மாநகராட்சி காலனி இரண்டாவது பிளாக்கை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் பாலாஜி (வயது 30) , இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆறுமுக நகர் பகுதியைச் சேர்ந்த அஜிஸ் என்பவரின் மகன் ராஜா உசேன் (வயது 33)இவரும் பாலாஜியும் நண்பர்கள் .

மாநகராட்சி காலனி பகுதியில் உள்ள வீரகாளியம்மன் கோவில் திருவிழாவில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது. அப்போதுபாலாஜி மற்றும் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த மௌனம் என்பவரின் மைத்துனருக்கும் வாய் தவறாக ஏற்பட்டு பின்ன தகராறு ஆக மாறியது .

அதனைத் தொடர்ந்து மௌனன் மற்றும்
மைத்துனர் உள்பட 5 பேர் கும்பல் இவருவரையும் தேடி வந்தது.

இந்நிலையில் பாலாஜி , ராஜா உசேன் ஆகிய இருவரும் மாநகராட்சி காலனியில் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த மௌனன் மற்றும் அவரது மைத்துணருடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ராஜா உசேன் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.

பாலாஜி கொலை கும்பலின் தாக்குதலுக்கு பயந்து மூணாம் பிளாக் பகுதியில் ஓடி சென்ற போது பின்னால் வந்த கும்பல் தாக்கியதில் சம்பவ இடத்திலே பலியானார்.

மேலும் ராஜா உசேன் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கொலை சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

கொலை சம்பவ இடத்தில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் சென்று நின்றது மற்றும் தடை அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்

கொலை சம்பவம் தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் இனிக்கோ திவ்யன் , மற்றும் மகேஷ் அகர்வால் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து குற்றவாளி குறித்து தகவல்களை திரட்டி வருகின்றனர்.