• Sat. Apr 26th, 2025

விபத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் தாக்கிக் கொண்டதில் ஒருவர் பலி

ByR. Vijay

Mar 15, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த புதுப்பள்ளி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவர் வேளாங்கண்ணியில் பெட்டிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர்கள் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் ராமநாயக்கன் குளத்தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் முகேஷ்குமார், . இவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் பணி முடித்து விட்டு முகேஷ்குமாரின் இரண்டு சக்கர வாகனத்தில் வேளாங்கண்ணியில் இருந்து திருப்பூண்டி காரை நகர் சென்றனர். அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு மீண்டும் வேளாங்கண்ணி சென்றனர். பிரதாபராமபுரம் நான்கு சாலை சந்திப்பில் வந்த போது இவர்களின் இரு சக்கர வாகனத்தில் பாலாஜியின் இரண்டு சக்கர வாகனம் மோதிக்கொண்டது.

இதில் இருதரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் முகேஷ்குமார், ரவிச்சந்திரன் ஆகிய இரண்டு பேரும் கோபமடைந்து பாலாஜியை அருகில் கிடந்த செங்கல் கல்லை எடுத்து அடித்தனர். இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேஷ்குமார், ரவிச்சந்திரன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.