திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் திருப்பூர், மங்கலம், பொள்ளாச்சி, உடுமலை ,திருச்சி கோவை, மற்றும் தென் மாவட்டங்கள் செல்லும் சாலைகளில் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரமாக உள்ள ராட்சத மரங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் இணையத்தள பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த இணைய கம்பங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன.

இதனால் பல்லடத்தில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் பல்லடம் வழியாக கோவை, உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூர், திருச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்லும் நிலை உள்ளதால் சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்நிலையில் மரங்கள் சாலையில் விழுந்து சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் ஜேசிபி உதவியுடன் மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பாச்சாங்காட்டு பாளையம் பகுதியில் நடந்து சென்றவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் சாயப்பட்டறை ஊழியர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவரின் உடலை கைப்பற்றி போலீசார் இறந்தவர் யார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.