புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேளாணி கிராமத்தில் முத்தையா என்பவர் வீட்டில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த பிறந்தநாள் விழா கேக் வெட்டி உறவினர்கள், அக்கம், பக்கத்தினர் கொண்டாடினர். இதில் மதிய உணவாக பிரியாணி அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதில் சாப்பிட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இதில் 26 பேர் மயங்கிய நிலையில் ஏம்பல் அரசு மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி அரசினர் மருத்துவமனை சிவகங்கை மாவட்டம் சூரக்குடி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


அதே கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் எந்த ஒரு மருத்துவமனைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இரவு திடீரென்று இறந்து கிடந்ததை கண்டு, அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அறிந்து ஏம்பல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவகுமார், அறந்தாங்கி துணை கண்காணிப்பாளர் ரவிகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர். அதனால் அப்பகுதியை பரபரப்பாக காணப்படுகிறது.