• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கண்டுபட்டி மஞ்சுவிரட்டில் வளர்த்த மாடு மார்பில் குத்தி ஒருவர் உயிரிழப்பு

ByG.Suresh

Jan 20, 2024

சிவகங்கை அருகே உள்ள கண்டுபட்டி பழைய அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவினை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு போட்டி ஆண்டுதோறும் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற விழாவில் அனைத்து சமூக மக்களும் புனித அந்தோணியார் ஆலயம் முன்பு பொங்கலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி, கரும்புத்தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மதியம் 2 மணி அளவில் வாடிவாசல் வழியே மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் முன்னதாக வாடிவாசல் அருகே உள்ள திறந்தவெளியில் அரசு அனுமதியின்றி 300க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. இதில் கட்டுமாடுகள் முட்டியதில் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் பாகனேரி அருகே உள்ள கோவினிபட்டியை பகுதியைச்சேர்ந்த பூமிநாதன் (56)என்பவரை தான் வளர்த்த மாட்டை கட்டுமாடாக அவிழ்த்து விடும் போது மாடு மார்பு பகுதியில் குத்தி சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் உடற்கூறு ஆய்விற்காக உடல் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் குறித்து மதகுபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.