• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முதல்வர் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து

ByA.Tamilselvan

Sep 7, 2022

கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை கேரளாவிலும், தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழக – கேரள எல்லையோர மாவட்டங்கள் உட்பட 9 மாவட்டங்களுக்கு தமிழக அரசு ஓணம் விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் வாழ்த்துச்செய்தியில் முதல்வர்… “மாயோன் மேய ஓண நன்னாள்” என சங்க இலக்கியமாம் மதுரைக்காஞ்யிலும் குறிப்பிடப்படும் இத்திருநாள் திடாவிட நிலத்தின் தொன்மையையும் நம்மிடையேயான பண்பாட்டு உறவையும் காட்டும் விழா. அன்பும் ,ஒற்றுமையும் ,சமுத்துவமும் ,சகோதர உணர்வுமே நம் வலிமை என்பதை பாறைசாற்றுவதற்காக இத்தகைய பண்பாட்டு திருவிழா அமையட்டும் என்றார்.