

திண்டுக்கல் மாவட்டம் பழநி வரும் பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியே படிப்பாதை, யானை பாதையை அடைந்து கோயில் செல்கின்றனர். பாதவிநாயகர் கோயிலில் இருந்து குடமுழுக்கு மண்டபம் வரை பக்தர்கள் வரும் கிரிவீதியில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கிரிவீதியில் வெப்பம் தாங்காமல் நடந்து செல்கின்றனர். இதனை அடுத்து, வடக்கு கிரி வீதி பகுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக சாமியான நிழல் பந்தல்களை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

