• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் நம்மாழ்வார் பிறந்த தினத்தை முன்னிட்டு நஞ்சு இல்லா வேளாண்மை, நஞ்சு இல்லா உணவை பயன்படுத்துவோம் என உறுதியேற்பு

ByP.Thangapandi

Apr 6, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வாரின் 86 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாரம்பரிய விதைகள் வைத்து நம்மாழ்வரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு நஞ்சு இல்லா வேளாண்மை, நஞ்சு இல்லா உணவை பயன்படுத்துவோம் என உறுதியேற்ற விவசாயிகள் சங்கத்தினர்.

அதனை தொடர்ந்து இலுப்பை பூ சாம்பா அரிசியில் பொங்கல், நாட்டு பசு மாட்டின் மோரினை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இதில் நம்மாழ்வார் இயற்கை வழி வேளாண்மை மற்றும் உற்பத்தியாளர் சங்கம், அன்ன வயல் இயக்கம், 58 கிராம கால்வாய் பாசன சங்கம், பி.கே.மூக்கையா தேவர் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.