தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்தநாளையொட்டி சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி தாளாளர் A.M.சேகர் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இந்தியா முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் இந்திய சுதந்திரத்திற்காக போரிட்ட சுதந்திர தியாகிகளுக்கு மரியாதை செய்வது வழக்கம். அதனைத் தொடர்ந்து இன்று சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சேகர் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து தேசபக்தி பாடல்களும் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களும், மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் தியாகராஜன் உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜ, சரவணன் பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர், மகரஜோதி, சக்திவேல், ஜெயமணி ஆகியோர் செய்திருந்தனர்.






