• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இருக்கை நுனியில், ஒரு திரில் பயணம் “காட்டேஜ்” !

Byதன பாலன்

May 18, 2023

“காட்டேஜ்” பின்னணியில் பரபரக்கும் புதுமையான திரைக்கதையில், அசர வைக்கும் திரில் பயணம் “காட்டேஜ்” !!

Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டீவி புகழ் KPY நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம், காட்டேஜ். ஃபர்ஸ்ட் லுக் மூலம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை அமானுஷ்யமாக பின் தொடரும் ஒரு மனிதன் அப்போது நடக்கும் கொலை, அதை யார் செய்தது என்பதை இருக்கை நுனியில் பரபரப்பாகச் சொல்லும் மர்டர் மிஸ்டரி திரில்லர் தான் காட்டேஜ். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க ஊட்டிப் பின்னணியில், நடக்கும் இப்படத்தின் மொத்தப்படப்பிடிப்பும் ஊட்டியில் 25 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு.

இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் டிவி புகழ் KPY நவீன் முரளிதர் நாயகனாக அறிமுகமாகிறார். ஆரியா செல்வராஜ் நடிக்கிறார். கஜராஜ், தர்மா, விக்னேஷ் ராமமூர்த்தி, ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.