• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நவ.13ல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்..!

Byவிஷா

Oct 28, 2023

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவம்பர் 13ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்த சஷ்டி விழாவும் ஒன்று. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் வரும் 13ஆம் தேதி கந்த சஷ்டி விழாவிற்கான காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்குகிறது என்று திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தினமும் காலை சண்முகா அர்ச்சனை நடைபெறும் சுவாமி வீதி உலா வரும் என்று அறிவித்துள்ளனர். நவம்பர் 17ஆம் தேதி கோவர்த்தன் அம்பிகையிடம் இருந்து சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்ய சக்தி வேலை வாங்கும் நிகழ்வு நடைபெறும் என்று தெரிவித்தனர்.
பின்னர் 18ஆம் தேதி சன்னதி தெருவில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் விழாவின் சிகர நிகழ்வாக சூரபத்மானை அளிக்கும் சூரசம்ஹார லீலை நடைபெறும். 19ஆம் தேதி கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான பாவாடை தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும் சுவாமி தங்கமயில் வாகனத்தில் வீதிகளில் வலம் வருவார் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கோயிலில் வந்து தங்குவார்கள், அவர்களுக்கான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை அறநிலையத்துறை சார்பில் கோயில் நிர்வாக அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.