• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோடு நகராட்சி சார்பில், பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடைகள் மற்றும் சமுதாய கழிப்பிடம்

ByNamakkal Anjaneyar

Feb 27, 2024

திருச்செங்கோடு நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சி பொது நிதியில் ரூ 64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள 22 கடைகள் மற்றும் 13வது வார்டு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ 20 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள சமுதாய கழிப்பிடம் ஆகியவற்றை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் மண்டல நகரமைப்பு திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருச்செங்கோடு நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சி பொது நிதியில் கட்டப்பட்டுள்ள 22 கடைகள் அடங்கிய வணிக வளாகத்தையும்,13வது வார்டு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 320 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய கழிப்பிடத்தையும்நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினருமான மதுரா செந்தில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சேகர் பொறியாளர் சரவணன் நகர் மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ராஜா,அண்ணாமலை, தாமரைச்செல்வி மணிகண்டன், ராதா சேகர், செல்வி ராஜவேல், புவனேஸ்வரி உலகநாதன், செல்லம்மாள் தேவராஜன்,சினேகா ஹரிகரன், நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், நகர துணை செயலாளர் கலைவாணிஅன்பு இளங்கோ, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் நகர துணை செயலாளர் ராஜவேல்,ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.