சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஏஎம்கே மஹாலில் தமிழ்நாடு வேளாண்மை துறை நிர்வாக பணியாளர் சங்கதின் 103வது மத்திய செயற்குழு கூட்டம், பதவி உயர்வு பாராட்டு விழா, பணி நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் வே.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் பாலாஜி, மாநில பொருளாளர் சரவணமூர்த்தி, சிவகங்கை மாவட்ட தலைவர் சந்தனகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பதவி உயர்வு மற்றும் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
