• Fri. May 3rd, 2024

சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை தேர்வு…

ByG.Suresh

Jan 6, 2024

சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டியில் இயங்கி வரும் மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது. DEEN DAYAL SPARSH YOJANA எனும் இந்தத் தேர்வு, இந்திய அஞ்சல் துறை மூலம் வருடந்தோறும் வகுப்பு 6 முதல் 9 வரை பயிலும் மாணவர்களுக்கு நடைபெறும். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அவர்கள் 12ஆம் வகுப்பு முடிக்கும் வரை வருடத்திற்கு ரூபாய்.6000/- கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த வருடத்திற்கான தேர்வு, சிவகங்கை மாவட்டத்தின் தேர்வு மையமான மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு S.மாரியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில்
மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் இருந்து 47 மாணவர்கள், மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருந்து 10 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து பள்ளித் தலைவர் டாக்டர். பால.கார்த்திகேயன் கூறுகையில், மத்திய அரசு மற்றும் மாநில அரசு குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகள் நடத்தி வருகிறது. இது போன்ற வாய்ப்புகளை கிராமப்புற மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் தலையாய நோக்கம் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளது. எமது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வகையான போட்டித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் நேற்றைய தினம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், SUITS இன் IECD (Institute for Entrepreneurship and Career Development) தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *