• Fri. May 3rd, 2024

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், கல்லூரியில் பனை விதை நடும் விழிப்புணர்வு…

ByKalamegam Viswanathan

Oct 30, 2023

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், பசுமலை பகுதியில் அண்ணா கல்லூரி வளாகத்தில் பனை விதைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனை கல்லூரி தலைவர் அண்ணாதுரை வரவேற்று மாணவ மாணவிகளிடம் அவரது சமூக சேவைகள், பசுமை பணிகள் மற்றும் விழிப்புணர்வுகள் குறித்து அறிமுகம் செய்து வைத்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பனை விதைகள் பயன்பாடுகள் குறித்து வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில்,
பனை விதைகள் சுற்றுச்சூழல் மற்றும் மனித நலனுக்கு பல வகையில் நன்மைகள் ஏற்படுத்துகிறது. இவற்றால் நிலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதோடு மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் பனை மரங்கள் மூலம் இயற்கை சத்துக்கள் நிறைந்த பல்வேறு உணவு பொருட்கள், மருந்துகள் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பயனுள்ள பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்றார். பின்னர் மாணவ, மாணவிகள் கரங்களில் பனை விதைகளை வழங்கி விதைக்க வைத்தார்.

நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள் ரமேஷ்குமார், ஜெயக்குமார், மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *