
மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இந்து முன்னணி சார்பாக, பாஜக நிர்வாகிகள், முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
மதுரையில் வரும் ஜூன் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடத்தப் போவதாக, ஹிந்து முன்னணி அறிவித்துள்ளது. இந்நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை இந்து முன்னணியினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ் மற்றும் நகரத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய நபர்களையும், முருக பக்தர்களையும் சந்தித்து மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஜி.என்.எஸ் .ராஜசேகரன், மாவட்ட பாஜக தலைவர் முருகதாஸ் உள்ளிட்ட பாஜகவினரை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த மாநாட்டிற்கு காரைக்கால் மாவட்டத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக இந்து முன்னணி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
