• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மாநகராட்சி சார்பில், மக்கள் குறை தீர்க்கும் முகாம்-மேயர்

ByN.Ravi

Aug 21, 2024

மதுரையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த்
தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில், நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி திருத்தம் தொடர்பாக 12 மனுக்களும், சொத்துவரி பெயர்மாற்றம் தொடர்பாக 14 மனுக்களும், புதிய வரிவிதிப்பு வேண்டி 10 மனுக்களும், பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு தொடர்பாக 21 மனுக்களும், நகரமைப்பு தொடர்பாக 5 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 8 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 2 மனுக்களும் என மொத்தம் 72 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து, மேயரால், நேரடியாக பெறப்பட்டது. இன்று நடைபெற்ற முகாமில் வீட்டு கதவு எண் மாற்றம் செய்ய வேண்டி விண்ணப்பித்த மனுதாரருக்கு உடனடியாக கதவு எண் மாற்றம் செய்து அதற்கான ஆணையினை , மேயர். ஆணையாளர் ஆகியோர் மனுதாரருக்கு வழங்கினார்கள்.
இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, உதவி ஆணையாளர் ரெங்கராஜன், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.