சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் கல்லூரி சாலையில் அமைந்துள்ள கட்சி ஒன்றிய அலுவலகமான கலைஞர் அறிவாலாயம் அரங்கம் முன்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மிக உற்சாகமாக தொண்டர்களுடன் கொண்டாடப்பட்டது இதனை ஒட்டிகலைஞர் அறிவாலயம் முன்பாக கழக இரு வண்ண கொடியை ஒன்றிய செயலாளர் ஜெயராமன் ஏற்றி வைத்தார் இதன் பின்னர் பொதுமக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து வந்தவாசி குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழக கொடி ஏற்றப்பட்டது.பின்னர்பனங்காடி செல்லும் சாலையில் அமைந்துள்ள தவளும் மாற்றுத்திறனாளிகளுக்கான தாய் இல்லத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் , ஏற்பாட்டில் அங்குள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவாக அறுசுவை உணவான பிரியாணி பரிமாறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் பஞ்ச வர்ணம், ஆதி திராவிட அணி மாவட்ட அமைப்பாளர் சிங்கமுத்து, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்திலகவதி கண்ணன, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வந்தவாசி செல்வம், ஹரி பாலா பாலச்சந்தர், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் ராம்குமார்
மற்றும் அழகு சுந்தரம், மூக்குத்தி பாலா, தங்கசாமி என ஏராளமான திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  ஏராளமான திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)