• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக்குழுவின் சார்பில், குடியரசு தின விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது…

ByKalamegam Viswanathan

Jan 26, 2024

“குடியரசு தின விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குடியரசு தின விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகை பத்ர காளி தலைமையிலும், நடிகை அங்கிதா முன்னிலையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி விட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி நடிகை அங்கிதா வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, மூத்த நடிகர் அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜி, நடிகை அமல் ராணி, அவரது கணவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா சிறக்க கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், கருங்காலக்குடி சந்துரு வாழ்த்தினார்கள்.