• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கழக அம்மா தொண்டர் படை சார்பில்.., மதுரை மாநாட்டில் தலைமையேற்கும் எடப்பாடியாருக்கு.. ராணுவ மரியாதை போல் அணிவகுப்பு பயிற்சி ஒத்திகை..!


கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கழக அம்மா பேரவை, கழக இளைஞர் பாசறை, கழக மகளிர் அணியில் உள்ள தொண்டர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட உள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் நாளில் அன்று காலை எடப்பாடியார் கழக கொடியினை ஏற்றுகிறார். அந்த இடத்தில் கழக அம்மா பேரவை தொண்டர் படையினர் சல்யூட் அடித்து ராணுவ மரியாதை போல் அணிவகுப்பு செய்கின்றனர். அதனுடைய ஒத்திக்கைகான அணிவகுப்பு வலையங்குளம் ரிங் ரோட்டில் உள்ள மாநாட்டு திடலில் நடைபெற்றது
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் ,கழக அம்மா பேரவை செயளாலரும், ஆர்.பி.உதயகுமார் கழக அம்மா பேரவை தொண்டர் படைக்கு பயிற்சியை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு மாநாடு முகப்பில் அணிவகுப்பு மரியாதை நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார். மற்றும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் பி சரவணன், எஸ்.எஸ். சரவணன், கே தமிழரசன், சதன் பிரபாகரன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், வெற்றிவேல், தனராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது..,
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் ஆயத்த பணிகளை கழக தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் மூத்த அமைச்சர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகஸ்ட் 20ஆம் தேதி மாநாடு அன்று கழகப் பொதுச் எடப்பாடியார் மாநாட்டு முகப்பு முன்பு அமைக்கப்பட்டுள்ள 51அடியுள்ள கொடிக்கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றுகிறார். அப்போது கழக அம்மா பேரவை தொண்டர் படையின் சார்பாக ராணுவ மரியாதை போல் சல்யூட் அடித்து அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த தொண்டர் படை ராணுவ சிப்பாய் போல அணிவகுக்க உள்ளனர் .மேலும் இந்த தொண்டர் படையில் கழக இளைஞர் பாசறை உள்ளிட்ட பல்வேறு அணிகள் அணிகள் தொண்டர் படையில் பங்கேற்க உள்ளது. அதனை தொடர்ந்து மாநாட்டிற்கு வருகை தரும் கழகத் தொண்டர்களுக்கு இருக்கைகள் ஏற்படுத்தித் தரவும், அவர்களுக்கு வேண்டிய குடிநீர், உரிய வழிகாட்டுதலை தொண்டர் படை சேவை செய்து களப்பணியாற்றும். இந்த மாநாடு புயல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்த மாநாட்டு திடலில் கழக கொடியினை எடப்பாடியார் ஏற்றுகிறார். மிக விரைவில் தேசியக் கொடியினை கோட்டையில் ஏற்றும் வாய்ப்பு விரைவில் எடப்பாடியாருக்கு உருவாகும்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது பத்தே நாளில் 11 கொலைகள் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற மானிய கோரிக்கையில் எடப்பாடியார் இரண்டரை மணி நேரம் ஒவ்வொரு மாவட்டம் தோறும் நடைபெறும் சட்ட ஒழுங்கு சீர்கேடு குறித்து புள்ளி விபரத்துடன் பேசினார்.
ஆனால் முதலமைச்சர் செவிடன் காதில் சங்கு போல இருக்கிறார் இன்றைக்கு சட்ட ஒழுங்கு சீர்கேட்டு அரசு செயல் இழந்து விட்டது. எடப்பாடியார் விடுத்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடந்திருக்காது பள்ளிகளில் ஜாதி கொடுமை அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்த தவறிய கையாளகாத அரசாக உள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை என நடைபெற்றாத நாளே இல்லை. ஆனால் முதலமைச்சருக்கு இதன் மீது அக்கறை இல்லை நாள்தோறும் பெயர் சூட்டும் விழாவையை மட்டும் தான் வைத்துக் கொண்டுள்ளார் அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. சட்டசபையில் அம்மா தாக்கப்பட்ட போது அந்த உண்மை சம்பவத்தை எடப்பாடியார் புள்ளி விவரத்துடன் எடுத்து கூறிவிட்டார். இதுதான் உண்மையான விசுவாசம் ஆனால் திருநாவுக்கரசிற்கு என்ன வாசம் என்று தெரியவில்லை என கூறினார்.