• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

டிஎன்இபி எம்ப்ளாயீஸ் பெடரேசன் தொழிற்சங்கம் சார்பில்..,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய கண்டன ஆர்பாட்டம்

ByG.Suresh

Feb 29, 2024

சிவகங்கை மாவட்ட அலுவலகம் முன்பு, டிஎன்இபி எம்ப்ளாயீஸ் பெடரேசன் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்ற்பத்தி பகிர்மான கழகத்தை (டேன்சட்கோ) மூன்று கம்பெனிகளாக பிரிப்பதை எதிர்த்தும் 12-2-24 ல் நிறைவேற்றப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் பாதகமான நிலைமைகளை விளக்கி திருத்தம் செய்யவும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய கண்டன ஆர்பாட்டம் டிஎன்இபி எம்ப்ளாயீஸ் பெடரேசன் தொழிற்சங்கம் சார்பில் சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஏ. சாத்தையா திட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.
மு.காளிமுத்து செயல் தலைவர் திரு ம ஆனந்தசெல்வட் பொருளாளர், திரு. எஸ். செல்லப்பன் மாநில கிளை செயலாளர், நிர்வாகிகள் திரு டி.கண்ணன், எஸ். காஜாமுகைதீன் ஆ.முத்துராமன். சி.வினோத் ம கருப்பசாமி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள பாதகங்களை திருத்தம் செய்யவும், வாரிய ஆணை 2 யை ரத்து செய்யவும், காலிப்பணிமிடங்களை நிரப்பவும் கேங்மேன் பணியாளர்களை சொந்த ஊருக்கு மாற்றவும் மற்றும் கள உதவியாளராக மாற்றுவது எவ்வோருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கே.ஆர்.கே சுப்பிரமணியன் திட்ட செயலாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்