• Sat. Dec 6th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அகில இந்திய ராஜகுலத்தோர் சார்பில்
மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் மனு

அகில இந்திய ராஜகுலத்தோர் சார்பில் அதன் ஈரோடு மாவட்ட செயலாளர் எஸ். சரவணகுமார் தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது: அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பாக தமிழகம் முழுவதும் சுமார் 60 லட்சம் பேர் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் இன்று இந்த சமுதாய மக்களின் சார்பாக ஒரே நேரத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. தங்களை தொழில் பெயரோடு இணைத்து களங்கம் விளைவிக்கும் விதமாக (வண்ணார்) என்று அழைப்பது தவறு என்பதையும் தொழில் வேறு சாதி வேறு என்ற அடிப்படையிலும் அது மட்டும் இல்லாமல் எங்களது முன்னோர்கள் பலர் பல பகுதிகளை ஆட்சி செய்த வரலாறு உண்டு.
எனவே தமிழக அரசின் அரசாணைப்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் வரிசை எண் 38ல் உள்ளபடியும் மத்திய அரசின் அரசாணைப்படி இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வரிசை எண் 156ல் உள்ளபடியும் இருக்கக்கூடிய ராஜகுல என்ற உட்பிரிவை ராஜகுலத்தோர் என்ற பெயரில் எங்களை அழைக்கவும். அதற்கான அரசாங்க சான்றிதழ் வழங்கவும் வலியுறுத்தி இந்த மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாநில அணி செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜ், கொடுமுடி சங்கர், சுப்பிரமணி, தங்கராஜ் உட்பட பலரும் உடன் இருந்தனர்.