

எல்ஃபின் மோசடி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஆதித்தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திருச்சியை தலைமையிடமாக கொண்ட நிதி நிறுவனமாக எல்ஃபின் நிறுவனமானது. மதுரை, திருச்சி, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள், இளைஞர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி ஒரு மடங்கு பணம் செலுத்தினால் மூன்று மடங்கு பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு 5 ஆயிரம் கோடி கொள்ளையடித்ததாக கூறியும், பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த எல்ஃபின் என்கிற நிதி நிறுவனத் தலைவர்களான அழகர்சாமி, பாபு, ராஜப்பா, இளங்கோ, துது ராம், சாகுல் ஹமீது, ரமேஷ், அறிவுமணி ஆகியோரை கைது செய்ய கோரியும் பொதுமக்களின் பணத்தை அவர்களிடம் இருந்து திரும்ப பெற்று தர கோரியும் ஆதி தமிழர் கட்சி நிறுவன தலைவர் கு.ஜக்கையன் தலைமையில் ஏராளமானோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் எல்ஃபின் நிதி நிறுவனத்தின் மீதான மோசடி வழக்கை பொருளாதார குற்றப் பிரிவிலிருந்து, சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றக் கோரியும், மேற்கண்ட குற்றவாளிகள் புதிதாக தொழில்கள் துவங்கிட அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராக கோரிக்கைகள் விடுத்தும், எல்ஃபின் நிதி நிறுவனத்தை தடை செய்ய கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் உள்ளே செல்ல முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கி சென்றனர்.
இது குறித்து பேசிய நிறுவன தலைவர் கு.ஜக்கையன் ..,
5கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த எல்ஃபின் நிதி நிறுவனத்தின் மீதான மோசடி வழக்கை பொருளாதார குற்றப் பிரிவிலிருந்து, சி.பி.சி.ஐ.டி க்கு மாற்ற வேண்டும், பொதுமக்களிடம் ஏமாற்றிய பணத்தை திரும்ப ஒப்படைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.
பைட்-1 திரு.கு.ஜக்கையன் – நிறுவன தலைவர், ஆதி தமிழர் கட்சி.
