திருப்பரங்குன்றம் கோவில் லெட்சுமி தீர்த்தகுளத்தில் ரூ 20 லட்சத்தில் ஓம்முருகா எழுத்து வடிவம் மற்றும் 36 அடி உயரம் கொண்ட நியான் விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

தெய்வானை அம்பாளுக்கான லெட்சுமி தீர்த்த குளம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 அடி உயரத்தில் 66 அடி அகலத்தில் 66அடி நீளமுள்ள நீளம் கொண்ட பழமை வாய்ந்த லெட்சுமி தீர்த்தக்குளம் அமைந்து உள்ளது. தெய்வானை அம்பாளுக்காக இந்த தீர்த்த குளம் அமையபெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் மற்றும்சுற்றுலா பயணிகள் அனைவரும் லெட்சுமி தீர்த்த குளத்திற்கு சென்று குளத்தில் உள்ள புனித நீரை அள்ளி கண்களில் ஒட்டிக் கொள்ளுவார்கள். மேலும் தங்களது கை, கால்களை அழம்பிய பிறகே கோவிலின் கருவறைக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.


ஒம் முருகா – 36 அடி உயர வேல் நியான் விளக்குகள் இத்தகைய சிறப்புகொண்ட லெட்சுமி தீர்த்த குளமானது சமீபத்தில் ரூ.6.50 கோடியில் புனரமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு உபயதாரர் மூலமாகரூ.20 லட்சத்தில் 15 அடி உயரமும் 52 அடி அகலமும் கொண்ட ” ஓம் முருகா ” என்ற சிவப்பு நிற எழுத்து வடிவத்தில் நியான் விளக்குகள் மற்றும் 36 அடி உயரத்தில் வேல் கொண்ட நியான் விளக்கு . பொருத்ததிட்டமிடப் பட்டுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக ஒம் முருகா என்ற நியாயன் விளக்கு பொருத்தும் பணி தொடங்கிகடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இந்த பணி மேலும் 2 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. இதனை தொடர்ந்து லெட்சுமி தீர்த்த குளத்திற்குள் 36 அடி வேல் அமைக்கும் பணி தொடங்கும் என்று தெரிகிறது. இதனையடுத்து மலையில் உச்சிப் பிள்ளையார் வளாகத்தில் ஓம் முருகா என்ற எழுத்து வடிவ நியான் விளக்கு பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.




