தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்ற ஆம்லெட் குமார்.
இவர் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது பத்துக்கு மேற்பட்ட கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மொத்தமாக கஞ்சாக்களை வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு இவர் சப்ளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் பழனி செட்டிபட்டி காவல்துறையினருக்கு கோடங்கிபட்டி பகுதியில் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்து.
அதனைத் தொடர்ந்து சார்பு ஆய்வாளர் அருண்பாண்டி தலைமையில் காவல்துறையினர் போடி விளக்கு பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு ஆம்லெட் குமார் பையுடன் நிற்பதை கண்ட காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து சோதனை செய்ததில் இரண்டு கிலோ பொட்டலங்கள் 6 பொட்டலங்களில் 12 ஒரு கிலோ கஞ்சாவுடன் காவல் துறையினர் கைப்பற்றினார்.

அவரிடமும் நடத்திய விசாரணையில் வெலி மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கோடாங்கி பட்டி சின்னமனூர் பாளையம் கம்பம் பகுதியில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆம்லெட் குமார் கைது செய்யப்பட்டு பழனி செட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆம்லெட் குமார் மிது ஆந்திராவிலும் இரண்டு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.




