• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அம்மா உணவகத்தில் ஆம்லெட்… சர்ச்சையான சம்பவம்..

Byகாயத்ரி

May 24, 2022

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவுகளை வழங்கி வருவதால் இன்றும் பொதுமக்கள் மத்தியில் அம்மா உணவகம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 12 அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அமைந்துள்ள ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இட்லி மற்றும் ஐந்து ரூபாய் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை,சப்பாத்தி மற்றும் ஆம்லெட் என தனியார் உணவகத்தில் கிடைப்பது போன்று பல்வேறு வகையான உணவுகளும் விற்பனை செய்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத உணவுகளை விற்பனை செய்த விவகாரத்தில் மகளிர் குழுவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆம்லெட் விற்பனை செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் விரைவில் புதிய மகளிர் குழுவிற்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.