மதுரை காளவாசல் பைபாஸ் சாலை ராம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பி.பி சாவடியில் இருந்து பழங்காநத்தம் நோக்கி தர்ஷித் வயது 19 என்கின்ற இளைஞர் கேடிஎம் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார்.

இதை கவனிக்காத சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சாலையின் கடக்க மேற்பட்டபோது கேடிஎம் பைக் ஆனது மூதாட்டியை அடித்து தூக்கியது. விபத்தில் பலியான மூதாட்டி யார் என தெரியவில்லை. சம்பவம் குறித்து தகவல் அறிந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்தில் உயிரிழந்த மூதாட்டியை யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.