• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திறந்தாச்சு ஒகேனக்கல்..! சுற்றுலா பயணிகள் குஷி…

Byகாயத்ரி

Feb 16, 2022

தமிழகத்ததில் பொதுமுடக்கத்தால் 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதில் மக்கள் பொழுதுபோக்கு இடங்களான பார்க், தியேட்டர், நீர்வீழ்ச்சி, சுற்றுலாத் தலங்கள் என பல்வேறு இடங்களுக்கும் செல்ல தடை விதிக்க ப்பட்டது.அதன்பின்னர் கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து சிறிது சிறிதாக பொதுமுடக்க தளர்வு நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அருவிகளில் குளிக்கவும், பரிசிலில் செல்லவும் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 7 மாதங்களுக்கு பிறகு ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார். மேலும் அருவிகளில் குளிக்கவும், பரிசிலில் செல்லவும், மசாஜ் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி வரை பரிசில் இயக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.