• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அழகின் அழகே! கழுத்தை அழகாக்க சில கருத்து…

ByMalathi kumanan

Jul 12, 2025

கழுத்து இல்ல… கழுத்து இல்ல…கண்ணதாசன் எழுத்து என்று அழகான பாடல் வரிகள் உண்டு.

கண்ணதாசன் எழுத்து என்பதைத் தாண்டி பிரம்மனின் அழகிய எழுத்துதான் கழுத்து.

நமது உடலையும் தலையையும் இணைக்கும் அழகிய  பிரதேசம்தான் கழுத்து. அந்த அழகை அழகாக்க இதோ சில கருத்து…

ஒரு பெண்ணுக்கு முகம் மட்டுமல்ல, கை, கால்களுடன், அழகான உடலும் சங்கு போன்ற கழுத்தும்தான் அழகு.

கழுத்து பகுதியில் இருக்கும் கருமையையும், சுருக்கங்களையும் எப்படி சரி செய்வது?

முகம் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நம் கழுத்து பகுதியும் மிகவும் முக்கியமான ஒன்று.  முகத்தின் அழகை பெருக்கிக் காட்டுவதில் கழுத்துக்கு முக்கியமான பங்கு உண்டு.  

போலியான நகைகளை அணிவதாலும், சிலருக்கு தங்கங்களை அணிவதாலும் கூட  அவற்றின் பாதரசம் கழுத்தில் படுவதனால்  கருமை உண்டாகும்.

கற்றாழை ஜெல்லியை எடுத்து தூங்குவதற்கு முன்பு, கழுத்தின் பகுதிகளில் தடவி சிறிது மசாஜ் செய்து அப்படியே விட்டுவிட்டு மறுநாள் அதனை கழுவி வர கருமை நீங்கும்.

எலுமிச்சை பழச்சாறுடன் சர்க்கரை சேர்த்து கழுத்து பகுதியில் சிறிது நேரம் மெதுவாக மசாஜ் செய்து அவற்றை குளிர்ந்த நீரினால் கழுவி வர கருமை நீங்கும்.

புளித்த இட்லி மாவுடன் சிறிது லெமன், சிறிது தேன் கலந்து கலக்கி கழுத்தில் உள்ள கருமையின் மீது தடவி காய்ந்த பின் அதனை வெதுவெதுப்பான நீரில் கழுவி வர கருமை நீங்கும்.

உருளைக் கிழங்கு சாற்றுடன், புதினா சாற்றையும் சேர்த்து, அவற்றுடன் சிறிது சர்க்கரை கலந்து ஸ்கிரப்பு கொண்டு நம் கழுத்தில் தடவி சிறிது நேரம் காய்ந்த பின் அதனை கழுவி வந்தால் கருமை நிறம் மாறும்.

ஜாதிக்காயை உரசி நம் கழுத்தில் உள்ள கருமை நிறத்தின் மேல் பூசி அதனை காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் நாம் கழுவி வாரம் ஒரு முறை இதை செய்தால் கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.

ஐஸ் கட்டியை எடுத்து தினமும் கழுத்தில் மேல் வைத்து தடவி வர சுருக்கங்கள் போக்கி கருமை நீங்கும்

 பயர்லீனா பவுடரில் விட்டமின் ஈ ஆயில் கலந்து நன்கு கலக்கி அதனை கழுத்தில் உள்ள கருமையான இடத்தில் தடவி வர அவற்றின் நிறம் போக்கி அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

பாசிப்பயிரை நன்கு ஊற வைத்து அதனை அரைத்து கழுத்தில் உள்ள கருமையான பகுதியில் தடவலாம். பிறகு உளுந்தையும் நாம் அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து கழுத்தில் தடவி வர கருமை நீங்கும்

தயிரில் சிறிதளவு மஞ்சள் தேன் இவற்றை கலந்து கழுத்தின் மேல் அப்ளை செய்து அவற்றை தினமும் கழுவி வர கழுத்து பகுதி பாதுகாப்பாக இருக்கும்

கோதுமை மாவு அவற்றுடன் சிறிது தயிர், லெமன் சாறு, விட்டமின் இ ஆயில் ஆகியவற்றைக் கலக்கி கழுத்தில் அப்ளை செய்த பின் சிறிது உப்பு மற்றும் சர்க்கரை இவற்றை தொட்டு மெதுவாக கழுத்தில் தடவி சிறிது நேரம் சென்று வெந்நீரில் கழுவி வர  கருமை நீங்கும்.

தக்காளியுடன் சிறிது உப்பை தடவி நம் கழுத்து மேல் தடவி வர கழுத்துப் பகுதி பளபளப்பாகும்.

இவ்வாறு நாம் முகத்தின் மேல் இருக்கும் அக்கறையை கழுத்து பகுதியில் சிறிது நாம் காண்பித்தால் நம் கழுத்து அழகாகவும் மிருதுவாகவும் மாறும்.