விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது.
இதுவரை பழைய மின்சாதன பொருட்கள் மூலமே செயல்படுத்தப்பட்டு வந்தது. பழைய மின் சாதனங்கள் அவ்வப்போது பழுதடைந்து வருவதால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தது. இதனால் அதிகாரிகளும் அலுவலர்களும் அதிக நீர்வரத்து சமயங்களிலும் வெள்ளப்பெருக்கு காலங்களிலும் பெரிதும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இதனை அடுத்து அலுவலர்களும் பொதுமக்கள் மின் சாதனங்களை சரி செய்து புதுப்பித்து நவீனமயமாக்க பலமுறை கோரி மனு அளித்துள்ளனர்.
இதனை அடுத்து மதகுகளை செயல்படுத்தும் மின்சாதனங்களை முற்றிலும் புதுப்பித்து நவீன முறையில் மாற்றி அமைக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் இன்று வெம்பக்கோட்டை நீர் தேக்க அணையில் உள்ள மதகுகளில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் கண்ணன் முன்னிலையில் நவீன முறையில் மின் சாதனங்கள் பொருத்தப்பட்டன. இதன் மூலம் அணையில் உள்ள ஐந்து ஷட்டர்களை எளிதாக இயக்க முடியும் எனவும் 1986க்கு பிறகு டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம மின்சாரம் எதிர்பாராத விதமாக குறைவாகவும் கூடுதலாக இருந்தாலும் சரி செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வைப்பாற்றில் வெள்ளம் அதிகரிக்கும் போது வெம்பக்கோட்டை அணைபாதுகாப்பு கருதி திறக்கும் போது எளிதாக திறக்கும் வகையில் தானியங்கி முறையில் ஷர்ட்டர்கள் இயக்கப்படும் எனவும் டிஜிட்டல் மீட்டர் அதன் மூலம் இயக்குவதற்கு மிகவும் எளிது என வைப்பாறு வடிநில உதவி பொறியாளர் கண்ணன் தெரிவித்தார்.